கொழும்பில் கால்வாய்களை அடைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 சட்டவிரோத கட்டிடங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பல நிர்மாணங்கள் கால்வாய்களூடான நீரோட்டத்தை தடை செய்துள்ளதாகவும், இதனால் கொழும்பு நகரில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சில குடியிருப்புகள் நேரடியாக நீர்வழிகளைத் தடுக்கின்றன, ஏனையவை கால்வாய்ப் படுகைகளில் கட்டப்பட்டுள்ளன.
மருதானை மற்றும் கிருலப்பனை பகுதிகளைச் சுற்றி இவ்வாறான பல சட்டவிரோத கட்டுமான குடியிருப்புகள் அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.