ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட அரசியல்வாதிகள் சிலர் கடும் அதிருப்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாசவை வளர்த்தெடுப்பதிலும், கட்சியின் பொருளாதார கொள்கைககளை வகுப்பதிலும் இதுகால வரையும் முன்னணியில் நின்ற கபீர் ஹாசிம், கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான் விக்கிரமரத்ன போன்றோர் முக்கிய பங்களித்துள்னர்.
பொதுஜன பெரமுண கட்சியின் அதிருப்தியாளர்கள் குழுவில் இருந்த ஜீ.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா போன்றோர் அண்மைக்காலமாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரசியல் செயற்பாடுகளின் போது ஜீ.எல். பீரிஸ் மற்றும் பொருளாதார விவகாரங்களில் கலாநிதி நாலக கொடஹேவா போன்றோரின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் சஜித் பிரேமதாசவிடம் அவர்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளனர்.
அதன் காரணமாக கபீர் ஹாசிம், கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான் விக்கிரமரத்ன உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் பலரும் கடும் அதிருப்திக்கு உள்ளாகி இருப்பதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மொட்டுக்கட்சி முக்கியஸ்தர்களை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதே கட்சியின் எதிர்கால நலனுக்கு நன்மை பயக்கும் என்று பலரும் பகிரங்கமாக விமர்சிக்கத் தலைப்பட்டுள்ளனர்.