நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார ஊழியர்களினால் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க முப்படையினரையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. இநத நடவடிக்கையால் ஏற்கனவே மருத்துவமனை கட்டமைப்பை பாதித்துள்ளது.
வைத்தியர்களின் கொடுப்பனவுகள் 35000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.