விசேட மேல் நீதிமன்றம்
போதைப்பொருள் வழக்குகளை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் உள்ளிட்ட பாரியளவிலான போதைப்பொருட்களை வைத்திருத்தல் மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளை துரித கதியில் விசாரணை செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறானதோர் மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது.
மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசேட உயர் நீதிமன்றம்
மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசேட மேல் நீதிமன்றமொன்றை பிரதம நீதியரசர் நிறுவியுள்ளார்.
சட்ட மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள இந்த நீதிபதிகள் குழாமின் தலைவராக மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதிகளான மஞ்சுல திலகரட்ன மற்றும் மகேஸ் வீரமன் ஆகியோர் இந்த நீதிபதிகள் குழாமில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.