நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ கிராம் கெரட் நேற்று ஆயிரம் ரூபா முதல் ஆயிரத்து 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சீன உணவுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பிரோக்கோலி உட்பட ஏனைய மரக்கறிகளின் விலையானது கிலோவுக்கு 7 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது என நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பிரதேசத்தில் மரக்கறிய விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம் ஒரு கிலோ கெரட் 900 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டாலும் அவை தரம் குறைந்ததாக இருந்தாகவும் பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லீக்ஸ், பீட்ரூட், கோவா ஆகிய மரக்கறிகள் 450 முதல் 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் போஞ்சி, கறி மிளகாய் என்பன 750 ரூபா முதல் 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரத்து 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு கிலோ முள்ளங்கி 350 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எவ்வாறாயினும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கெரட் 350 ரூபா முதல் 400 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.