ஒரே வாரத்தில் புருவங்களை அடர்தியாக்கலாம் எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்

முகத்தை அழகுப்படுத்திக் கொள்வதிலேயே பொதுவாக அனைவரும் கவனம் செலுத்துகிறோம், ஆனால் முகத்திற்கு அழகு சேர்க்கும் கண்கள் பற்றி அவ்வளவு கவனம் எடுப்பதில்லை.

ஆனால் உண்மையில் முகத்தை விட கண்களுக்கே ஈர்க்கும் தன்மை அதிகம், கண்களை அழகாக காட்ட வேண்டும் என்றால் புருவங்கள் நேர்த்தியாக இருக்க வேண்டும்.

அழகிய புருவங்கள் எவ்வளவு அழகான கண்களை கொண்டிருந்தாலும் புருவங்கள் நேர்த்தியாகவும் அடர்த்தியாகவும் இல்லாவிட்டால் அந்த கண்களுக்கு ஈர்ப்பும் கவர்ச்சியும் இருக்காது.

பெண்களுக்கு புருவம் வில் போல் அமைந்து இருந்தால் தான் அழகு. சுமாராக காணப்படும் பெண்கள் கூட புருவம் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள். கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களின் அழகையும் கெடுத்து விடும்.

புருவங்கள் சிலருக்கு என்ன செய்தாலும் வளராது. புருவம் போதிய வளர்ச்சி பெறாமல் இருந்தால் என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அடர்த்தியான புருவங்களை பெற…

புருவமே இல்லாதவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே நல்ல தரமான மையை புருவத்தில் வைத்து விட்டு வந்தால் புருவம் அதே வடிவத்தில் அழகாக வளரும். ஐப்ரோ பென்சிலால் இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய்யால் தொட்டு புருவத்தில் வரைந்து கொண்டு தூங்கினால் புருவம் அடர்த்தியாக வளரும்.

தினமும் தூங்குவதுற்கு முன்பு புருவங்களில் விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் இரண்டு மாதங்களில் புருவம் அடர்த்தியாக மாறுவதைக் காணலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி இளஞ்சூட்டில் புருவத்தில் மசாஜ் செய்து வர பலன் தெரியும்.

வெங்காயச் சாற்றை ஒரு பஞ்சில் நனைத்து தினமும் படுப்பதற்கு முன்பு தடவி வந்தால், புருவத்தில் விரைவில் முடி வளர்வதை நம்மால் காணமுடியும்.

கற்றாழை சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் தேய்த்து வருந்தால், அங்கு ஏற்பட்டுள்ள தொற்று நீங்கி முடி வளர ஆரம்பித்துவிடும்.

புருவ சீரம் கடைகளில் கிடைக்கும் அதனை வாங்கி, இரவு தூங்குவதற்கு முன் முகத்தை கழுவிய பின், சீரத்தை ஒரு பிரஷினால் புருவத்தில் தடவ வேண்டும்.

மறுநாள் காலையில் கழுவுங்கள். இப்படி செய்வதால் புருவ முடிகள் தூண்டப்பட்டு, முடி வளர ஆரம்பிக்கும்.

Recommended For You

About the Author: webeditor