இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கு பல வழிகளை மக்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவை அவ்வளவாக தீர்வு அளிப்பதில்லை.
டயட் மற்றும் உடற்பயிற்சி என அதிகமாக செலவும் செய்து வருகின்றனர். ஏனெனில் உடல் எடை அதிகரித்துவிட்டால், அடுத்தடுத்து நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்படுவதால், உடல்எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.
குளிர்காலத்தில் விரைவாக உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க
காலையில் எழுந்ததும் 1 அல்லது இரண்டு டம்ளம் வெதுவெதுப்பான நீரை வெறும்வயிற்றில் குடிக்க வேண்டும்.
காலையில் வேக வைத்த முட்டை அல்லது பாலில் ஊற வைத்த ஓட்ஸ் சாப்பிட வேண்டும்.
பின்பு சிறிது நேரம் கழித்து உலர்ந்த பழங்கள் மற்றும் ஒரு கப் கிரீன் டீ அல்லது பழச்சாறு, காய்கறி சூப் குடிக்கலாம்.
மதிய உணவில் சிகப்பு அரிசி சாதம் 1 அல்லது 2 மல்டிகிரைன் ரொட்டி இவற்றினை சாப்பிடவும்.
வெந்தய கீரை மற்றும் கடுகு கீரை இவற்றினை குறைந்த எண்ணெய்யில் சமைத்து சாப்பிடவும்.
முழு தானியங்கள், பருப்பு வகைகள் அல்லது காய்கறி ரைதாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மாலையில் வேளையில் கிரீன் டீ அல்லது உலர் பழங்கள், பருவ காலத்தில் கிடைக்கும் பழங்களை சிற்றுண்டியாக சாப்பிடவும்.
இரவில் சாலட் மற்றும் காய் கறி சூப், வேக வைத்த காய்கறிகள், பருப்பு மற்றும் 2 தானிய ரொட்டி அல்லது கிச்சடி இவற்றினை எடுத்துக்கொள்ளவும்.
அதே போன்று இரவு உணவை 8 மணிக்குள் உட்கொள்ளவும். தேன் மற்றும் வெல்லம் இவற்றினை அளவாக உட்கொள்ளவும். பருப்பு வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
எடையைக் குறைக்க தினமும் 1 மணி நேரம் நிச்சயமாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்