பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கும் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதற்கான நிதி நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி நேற்று (11) கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் நிதியுதவியை பாகிஸ்தான் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவது மிகவும் முக்கியமானது என வெளிநாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.