தனித் தனி அரச வீடுகளில் வசிக்கும் ராஜபக்சர்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக வரவு – செலவுத் திட்டத்தில் அதிகளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடு அதல பாதாளத்தில் இருக்கும் வேளையில் ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதாகவும் உலகில் எந்தவொரு ஜனாதிபதியும் இவ்வாறான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதில்லை எனவும் அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரிசி, எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள், பாடசாலை உபகரணங்கள், பால் மா என மக்கள் அன்றாட நுகரும் பொருட்கள் மீது வற் வரியை விதித்து சேகரிக்கப்படும் நிதியில் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார்.

வெளிநாடுகளில் எவரும் இறந்துபோனால் அங்கு செல்கிறார். அல்லது ஏதாவது விழாக்களுக்குச் செல்கிறார். அல்லது எந்தவொரு உலகத் தலைவர்களும் பங்கேற்காத நிகழ்வுகளில் சென்று உரையாற்றுகிறார். இதனால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பயன் என்ன?.

ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் அரசாங்க வீடுகளில் இருக்கின்றனர். அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது வெட்கக்கேடானது. மகன் அரசு வீட்டில், அப்பா அரசு வீட்டில், மாமா அரசு வீட்டில், சின்ன மாமா அரசு வீட்டில், கொள்ளு தாத்தா அரசு வீட்டில். இது வெட்க கேடான விடயம் இல்லையா.

துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான கப்பல்கள் அரச நிதியை செலவழித்து நடு இரவில் கடலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். இவர்கள் நடு இரவில் என்ன செய்வார்கள் என எமக்குத் தெரியாதா?. 20 மீற்றருக்கு அப்பால் கண் தெரியாதவர்கள்தான் கடலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

இந்த செலவுகள் அனைத்தும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.” என்றார்.

Recommended For You

About the Author: admin