ஹவுதிகளை கட்டுப்படுத்த பணத்தை செலவிடுகிறார் ஜனாதிபதி

நாட்டில் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு தினசரி உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், இளைஞர்கள் மற்றும் நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், தொழில்முனைவோர் துயரத்தில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பணத்தில் இருந்து 250 மில்லியன் ரூபா செலவழித்து கடற்படையின் கப்பலை ஹவுதி கிளர்ச்சிக் குழுவினரை ஒடுக்குவதற்காக அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளமை பிரச்சினைக்குரிய விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் அத்தியாவசிய உள்ளக நடவடிக்கைகளுக்காக இருக்கும் பணம் ஹவுதி கிளர்ச்சி குழுவினரை ஒடுக்குவதற்கு செலவழிக்க உள்ளனர். இதற்காக நாட்டின் கடனில் இருந்து குறைந்தது 25 பில்லியனையாவது குறைப்பதாக வெளிநாடுகள் உறுதியளித்துள்ளனவா? என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். இதனால் நாட்டுக்கு ஏற்பட போகும் பலன் என்ன என்பதையும் விளக்கமளிக்க வேண்டும்.

ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் இந்நாட்டு மக்கள் படும் இன்னல்களை புரிந்து கொள்ளாது செயல்படுவதால் சிறு குழந்தை முதல் கர்ப்பிணி தாய்மார்கள்,பாடசாலை மாணவர்கள்,இளைஞர்கள் வரை சகலரும் மிகவும் நிர்க்கதி நிலையில் உள்ளனர்.

இந்தப் பணம் நாட்டின் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏன் செலவிடப்படவில்லை. அமெரிக்கா,இந்தியா போன்ற பலம் வாய்ந்த நாடுகள் இருக்கும் போது ராஜபக்சவின் ரொக்கட்களை ஏவி வங்குரோத்தடையச் செய்த இந்நாட்டில், இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது மேலும் நாட்டை வங்குரோத்தடையச் செய்வதற்காகவா? எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பினார்.

Recommended For You

About the Author: admin