இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
‘‘புதிய பொருளாதார மண்டலத்தின் ஊடாக இந்த தொழில் துறையினர் ஒரே இடத்தில் இருந்து பணியாற்ற முடியும். நாட்டின் முக்கியமான துறைகளாக இவை இரண்டும் இருப்பதால் இரண்டு துறைகளையும் ஒருங்கிணைப்பது முக்கியமாகும்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைகள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது. இந்த இருண்ட பொருளாதார நிலை நீங்கும் வரை பொறுமை காக்குமாறும் துறைசார்ந்தவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
தற்போதைய கடினமான காலத்தை கடக்க அரசாங்கத்திற்கு கூடுதல் வருமானம் தேவைப்படுவதால் வற் மற்றும் பிற வரிகளை அதிகரித்துள்ளது.‘‘ என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன கூறியுள்ளார்