அலாஸ்கா ஏர்லைன்ஸ் தரையிறங்க தடை

171 போயிங் 737 MAX 9 ரக விமானங்களை தரையிறக்க அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) உத்தரவிட்டதை அடுத்து, அலாஸ்கா ஏர்லைன்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை 170 விமானப் பயணங்களையும், இன்று திங்களன்று கூடுதலாக 60 விமான பயணங்களையும் ரத்து செய்துள்ளது.

இன்னும் சில நாட்களுக்கு இந்த விமானங்களின் ரத்து தொடரும் என்பதால், இதனால் கிட்டத்தட்ட 25,000 பயணிகள் பாதிப்படை உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, 174 பயணிகளை ஏற்றி சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசர வெளியேறும் கதவு நடுவானில் கழண்டு வெளியே பறந்தது. அதனையடுத்து, அந்த விமானம் அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது,

அதிர்ஷ்டவசமாக, அந்த விமானத்தில் இருந்த பயணிகளும் பணியாளர்களும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பான சூழலை உருவாக்கியது.

விபத்துக்குள்ளான அந்த விமானம் ஒரு புத்தம் புதிய விமானமாகும். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அதற்கு சான்றிதழும் அளிக்கப்பட்டது. எனவே, இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு, அதே வகையை சேர்ந்த அனைத்து போயிங் ஜெட் விமானங்களையும் தற்காலிகமாக முடக்க அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் உத்தரவிட்டது.

அந்த ஜெட் விமானங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்த பின்னர் தான் அவை மீண்டும் இயக்கப்படும் என்று அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் போயிங்கின் 737 MAX 9 விமானங்களின் பாதுகாப்பு குறித்த பரந்த கவலைகளை எழுப்புயுள்ளது.

Recommended For You

About the Author: admin