கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் உதவி ஊழியர்களின் அடிப்படை பிரச்சினை மற்றும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கு வழங்கிவரும் உணவு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த 9 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 11ஆம் திகதி வைத்தியசாலைகளுக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபடுப் போவதாக ஒன்றினைந்த சுகாதார வேவைகள் சங்க மத்திய குழு உறுப்பினர் மாணிக்கராசா லோகராஜ் தெரிவித்தார்.
ஏறாவூர் புன்னக்குடா வீதியிலுள்ள ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்க காரியாலயத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடகவியலாளார் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தர்.
சம்பள உயர்வு உடனடியாக வழங்கு வரிச்சுமையுடன் கூடிய பொருட்களின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் எனகோரி 9 கோரிக்கைகளை முன்வைத்து சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தோம்.
இருந்தபோதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே இந்த 9 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 11 ம் திகதி பகல் 12 மணியளவில் வைத்தியசாலைகளுக்கு முன்னால் கவனயீர்பு ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதுடன் எதிர்வரும் 22 சுகயீன விடுமுறை தெரிவித்து திருகோணமலையில் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் காரியாலயத்துக்கு முன்னால் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றிவரும் உதவி ஊழியர்கள் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக அவர் தெரிவித்தார்.