ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்குள் பாரியளவிலான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
வேட்பாளர்கள் தொடர்பில் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள், முரண்பாடான சூழலுக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தயார் என அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் கட்சிகளின் இணைக்கப்படும் நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்காத தயார் என குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல அரசியல் கட்சிகள் அவரை வேட்பாளராக களமிறக்குவதற்கு தயாராக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.