புகலிடக்கோரிக்கைக்காக அரசாங்கத்தை ஏமாற்றும் புலம்பெயர்ந்தோர்

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையை பெறுவதற்கு அரசாங்கத்தை ஏறமாற்ற முயன்ற சுமார் 4 ஆயிரம் பேரை பிரித்தானிய அரசு அடையாளம் கண்டுள்ளது.

பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் விதிகளின்படி, குடும்பத்தினர் துணையின்றி புகலிடம் கோரும் சிறுவர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கப்படுவதுடன், குடியிருப்பதற்கான வசதியும் வழங்கப்படுகின்றது.

இதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திய இளைஞர்களை அந்நாட்டு அதிகாரிகள் அடையாளங்கண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதிக்குள் மாத்திரம் 887 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு மாத்திரம் 1,582 பேர் அடையாளங்காப்படுள்ளதுடன், அவர்களில் ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் சூடான் ஆகிய நாட்டை சேர்ந்தவர்களே அதிகம் காணப்படுகின்றனர்.

இந்நிலைமை பிரித்தானியாவில் மேலும் தொடர்வதால் வயது மதிப்பீட்டு செயல்முறையை வலுப்படுத்த இருப்பதாக அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin