தனித்து வாழும் விலங்குகள் அதிகரிப்பு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கூண்டுக்குள் தனித்து வாழும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 15 விலங்குகள் கூண்டுகளில் தனியாக வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 35 விலங்குகள் ஆன் துணை இன்றியும், 21 விலங்குகள் பெண் துணை இன்றியும் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சுமார் 15 வருடங்களாக தனிமையில் வாழ்ந்த ஜப்பானிய பெண் குரங்கு கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி உயிரிழந்தது.

தனிமையில் வாழ்ந்தமையினால் குறித்த குரங்கு மனச்சோர்வினால் புற்றுநோய் நிலை மோசமடைந்ததாக பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.

இதன்படி, தனியாக வாழ்வதும், தனிமையில் இருப்பதும் விலங்குகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.

விலங்கு நல உத்திகளின் நெறிமுறை அமைப்பின்படி, மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளின் இயல்பான நடத்தைக்குத் தேவையான சூழலை தயார் செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையில், பல்வேறு சர்வதேச விலங்கு பரிமாற்ற திட்டங்களுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தேசிய கணக்காய்வு அலுவலகத்திடம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin