பொதுவாக நாம் அனைவரும் நாளை ஒரு கப் டீ அல்லது காஃபியுடன் தான் ஆரம்பிப்போம். இவ்வாறு மனித வாழ்க்கையில் டீ இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது.
அந்த வகையில், காலையில் எழுந்ததும் டீ, அலுவலகம் வந்ததும் டீ, மதிய உணவுக்கு பின் டீ, மாலையில் டீ என ஒரு நாளைக்கு 5 முதல் 6 கப் வரை டீ குடிப்பதை சிலர் பழக்கமாகவே கொண்டுள்ளனர்.
நாளொன்றுக்கு இவ்வளவு டீ குடிக்கும் ஒருவர் திடீரென ஒரு நாள் டீ குடிக்காவிட்டால் தலைவலி ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. உணவு இல்லாமல் கூட இருப்பார்கள் டீ இல்லாமல் இருக்க மாட்டார்கள்.
இந்த பழக்கம் எண்ணற்ற நன்மைகளை நமக்கு கொடுத்தாலும் சில தீங்குகளையும் சேர்த்து கொடுக்கிறது.
டீயால் ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுபடுத்த வேண்டும்? டீயை அளவாக குடிக்க வேண்டும்? என நினைப்பவர்கள் டீ பழக்கத்தை குறைக்க சில வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
டீ பழக்கத்தை கட்டுக்குள் வைக்கும் வழிமுறைகள்
1. தேநீர் அல்லது காஃபி குடிக்கும் பொழுது சிறிய அளவு கப்களை பயன்படுத்த வேண்டும். பலர் வேலை பளுவால் நீண்ட நேரம் பசியுடன், டீயை மட்டும் குடித்து கொண்டு வேலை செய்வார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் பெரிய அளவு கப்களில் டீயை ஊற்றி குடிப்பார்கள். இதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
2. ஒரு நாளைக்கு தேவையான டீயை மொத்தமாக தயார் செய்து விட்டு, அடிக்கடி அதை சூடாக்கி குடிப்போம். இந்த பழக்கம் முற்றிலும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
3. டீயை அடிக்கடி சூடாக்கி குடிக்கும் பொழுது விஷமாக மாறும். டீயிற்கு பதிலாக பால், க்ரீன் டீ அல்லது வேறு ஹெர்பல் டீயை குடிக்கலாம். இது போன்ற திரவ உணவுகளை எடுத்து கொள்வதால் உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கியம் கிடைக்கும்.