மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் ஏற்பட்ட மினி சூறாவளியையடுத்து குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் சேதமடைந்திருப்பதாக வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் நேற்று இரவு மினி சூறாவளி உருவானது. இதனையடுத்து வாகரை காயங்கேணி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி இயந்திர படகுகள் ஆறு சேதமடைந்துள்ளதுடன், மூன்று படகுகளின் எஞ்ஜின்களும் சேதமடைந்துள்ளன.
கடந்த வாரங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கல்லரிப்பு பிரதேசத்துக்கான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது. குறித்த பகுதிக்கான போக்குவரத்து உழவு இயந்திரம் மற்றும் படகு சேவைகள் மூலமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் 22 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் திரவெளி கனிஸ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே தற்போது குறித்த பகுதி மக்களை மேலும் பாதிக்கும் வகையில் மினி சூறாவளியினால் படகுகள் சேதமைந்திருப்பது கவலையளிப்பதாக வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் தெரிவித்தார்.