இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்க

சமூக ஊடக நிறுவனமான Meta தொடர்ந்து பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை மீறுவதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது.

இதில் பயனர்களின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணித்து, குறிப்பிட்ட விளம்பரங்களுக்காகப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

மொபைல், ஸ்மார்ட் வாட்ச், ஏதேனும் ஒரு உணவு குறித்து நீங்கள் பேசிக்கொண்டிருந்த பிறகு, பேஸ்புக்கை ஓபன் செய்தால் அது தொடர்பான விளம்பரம் ஒளிபரப்பாகும்.

இது பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சனைக்கு தீர்வாக, Meta நிறுவனம் “எக்டிவிட்டி ஆஃப்-மெட்டா டெக்” (Activity Off-Meta Technologies) என்ற புதிய பிரைவசி செட்டிங்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.

எக்டிவிட்டி ஆஃப்-மெட்டா டெக்

Activity Off-Meta Technologies என்பது பயனர்களின் ஆன்லைன் செயல்பாடுகளை Meta பிளாட்ஃபார்முடன் பகிரும் செயலிகள் மற்றும் இணையதளங்களைப் பார்க்கவும் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கும் ஒரு அமைப்பாகும்.

இதில் வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுடனான தொடர்புகள், அவற்றின் செயலிகள் அல்லது இணையதளங்களைப் பார்வையிடுவது போன்ற தகவல்கள் அடங்கும்.

இன்ஸ்டாகிராம் இணைய செயல்பாட்டைக் கண்காணிப்பதில் இருந்து எவ்வாறு நிறுத்துவது?

  • இன்ஸ்டாகிராம் செயலியின் கீழ் வலது மூலையில் உள்ள புரொபைல் புகைப்படத்தைத் க்ளிக் செய்யவும்
  • பின்னர் மேல் வலது மூலையில் உள்ள மூன்று நேரடி விருப்பங்களைத் க்ளிக் செய்து “அமைப்புகள் & தனியுரிமை” என்பதை அழுத்தவும்.
  • எக்டிவிட்டி (Activity) என்பதைத் க்ளிக் செய்யவும், பின்னர் “Meta Technologies Activity” என்பதை க்ளிக் செய்யவும்.
  • Disconnect future activity என்பதை ஆஃப் செய்தால் சரி
  • உடனே இன்ஸ்டாகிராம் உங்களின் இணைய செயல்பாட்டைக் கண்காணிப்பதை நிறுத்தும்.

பேஸ்புக் இணைய செயல்பாட்டைக் கண்காணிப்பதில் இருந்து எவ்வாறு நிறுத்துவது?

  • பேஸ்புக் செயலியின் மேல் வலது மூலையில் உள்ள உங்கள் பெயரை க்ளிக் செய்யவும்
  • பின்னர் வெட்டிங்ஸ் (Settings)செல்லவும்.
  • எக்டிவிட்டி & டேடா (Activity and data) க்ளிக் செய்யவும்.
  • மை எக்டிவிட்டி (My Activity) க்ளிக் செய்யவும்.
  • இறுதியாக டிஷ்கனைக்ட் எக்டிவிட்டி (Disconnect activity) என்பதை ஆஃப் செய்யவும்.

இந்த அமைப்பை மாற்றியமைத்தவுடன், Meta உங்கள் Facebook செயல்பாட்டைக் கண்காணிப்பதை நிறுத்தும்.

குறித்த அரு செயலிகளிலும் ஏற்கனவே பகிர்ந்துள்ள எந்தவொரு தரவையும் நீக்க முடியாது, ஆனால் புதிய தரவுகள் பகிரப்படுவதைத் தடுக்கலாம்.

Recommended For You

About the Author: admin