காலையில் இந்த உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்

காலை உணவு என்பது மிகவும் முக்கியமானதாகும். பள்ளி மற்றும் கல்லூரி, வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மூன்று வேளை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அதிலும் காலை உணவை மட்டும் தவிர்க்க கூடாது. இன்று பெரும்பாலான நபர்கள் காலை உணவை எடுத்துக் கொள்ளாமல் பரபரப்பாக வேலைக்கு செல்கின்றனர்.

ஆனால் இது பாரிய உடல் பிரச்சினையில் கொண்டு போய்விடும். இங்கு காலை உணவாக நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய சில உணவுகளை குறித்து தெரிந்து கொள்வோம்.

அவல்:
குறைந்த கலோரி கொண்ட அவலை(Poha) காலை உணவாக எடுத்துக்கொண்டால், வயிறு நிரம்புவதுடன், எடையும் கட்டுக்குள் இருக்கும்.

ஆம்லெட்:
காய்கறிகள் போட்டு ஆம்லேட் காலை உணவாக எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம். முட்டை புரதத்திற்கு சிறந்த ஆதாரமாகவும், இவற்றை சாப்பிட்டால் வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வும் காணப்படும்.

பாசிப்பருப்பு சீலா:

தாமிரம், ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின்கள், வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் இந்த பாசிப்பருப்பு சீலாவில் காணப்படுகின்றன. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை அதிகமாக அதிகரிக்காது மற்றும் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்கும்.

இட்லி:
இட்லி என்பது மிகக் குறைந்த கலோரி கொண்ட காலை உணவாகும், கெட்ட கொழுப்பு அளவை குறைப்பதுடன் நீண்ட நேரம் பசி ஏற்படாமலும் இருக்கும்.

Recommended For You

About the Author: webeditor