ஒலிம்பிக் விளையாட்டுகளின் முதல் நாளன்று பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஹோட்டல்களில் தங்குவதற்கான கட்டணம் மும்மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அன்றைய தினம் சராசரியாக ஒரு ஹோட்டலில் தங்குவதற்காக குறைந்தது 1,000 யூரோ ஒரு அறைக்காக அறவிடப்படுவதாக பயனீட்டாளர் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுகள் ஜூலை மாதம் 26ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதிவரை பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உலகின் பலநாட்டில் இருந்து தங்குவிடுதிகள் முன்பதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனால், பரிஸில் உள்ள பெருமளவான தங்கு விடுதிகள் ஜூலை மாதம் 26ஆம் திகதி முழுமையாக முன்பதிவுசெய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில தங்கு விடுதிகளில் மாத்திரமே அறைகள் உள்ளன. அவற்றின் விலை 1,000 யூரோவுக்கும் அப்பால் செல்லக் கூடிய நிலைமை உள்ளதாகவும் கூறப்படுகிறது.