கொலஸ்ட்ராலை சட்டென குறைக்கும் சங்கு பூ.. டீ குடிக்கலாமா?

பொதுவாக உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு தாவரங்கள் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.

இதிலிருக்கும் ஊட்டசத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களுக்கு எதிராக போராட வைக்கின்றது.

இதன்படி, பூக்கள் இனத்தை சார்ந்த செம்பருத்தி, சங்கு பூ இரண்டையும் டீ போட்டு குடிப்பதால்ஏகப்பட்ட நோய்கள் குணமாகும் என கூறப்படுகின்றது.

அத்துடன் இந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால் தலைமுடி, சருமம், மாதவிடாய், மனநலப் பிரச்சனைகள் போன்றவை சீராகும்.
மேலும் இந்த ஆயுர்வேத டீயால் கொலஸ்ட்ரால் அளவு, டயாபடீஸ், சருமம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன் கோளாறுகள் குணமடையும்.

இப்படி ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கும் சங்கு பூ மற்றும் செம்பருத்தி பூ இரண்டையும் சேர்த்து எப்படி டீ போட்டு குடிப்பது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

சங்கு பூ -இரண்டு
செம்பருத்தி பூ – 1
தண்ணீர் – 1 கப்

டீ செய்முறை
1. தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த இரண்டு மலர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

2. அடுப்பை மிதமான வெப்பநிலையில் வைத்து விட்டு தண்ணீர் நீல நிறம் வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

3. நிறமாறியதும் கப்களில் மாற்றி சூடாக பறிமாறலாம். அத்துடன் சுவை ஏற்பட்டால் தேன் கலந்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு

உணவு சாப்பிடுவதற்கு முன் இந்த டீயை பருகினால் உங்களின் மெடபாலிஸம் துரிதமாக செயல்படும்.

Recommended For You

About the Author: webeditor