வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ள பிரித்தானிய வைத்தியர்கள்

இங்கிலாந்தில் உள்ள வைத்தியாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் நீண்டகால தொடர் வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானியாவின் தேசிய சுகாதாரச் சேவை வரலாற்றில் இதுவரை கண்டிராத வேலைநிறுத்தமாக அது கருதப்படுகிறது.

வைத்திய ஆலோசகர் நிலைக்குக் கீழ் உள்ள இளநிலை வைத்தியர்கள் குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நீண்டகாலமாகத் தொடரும் பிரித்தானிய அரசாங்கத்துடனான சம்பள விவகாரம் தொடர்பிலேயே இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மருத்துவச் சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அவ்வறிக்கையில், “வைத்திய தொழில் மீதான நம்பிக்கைக் குறைந்து வருகிறது. இந்தத் துறையில் தொழில்புரியும் பலருக்கு இத்துறையில் நீடிக்க முடியுமா என்ற சந்தேகத்தை கொண்டுள்ளனர்.

எனவே, இந்த நாட்டில் வைத்தியர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது என்பதை அரசாங்கம் உணர்த்த வேண்டும்.

வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வைத்தியர்களுக்கு நியாயமான சம்பளத்தை அரசாங்கம் வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பிரித்தானியாவில் குளிர்காலத்தில் மக்களிடையே சுவாசப் பிரச்சினைகள் அதிகரிக்கும். இந்நிலையிலேயே தற்போது வைத்தியர்கள் குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன்காரணமாக பிரித்தானிய மக்கள் பாரிய சிக்கலை்கலை எதிர்கொள்ளவுள்ளனர்.

இதற்கு முன்னரும் பண்டிகை காலத்தில் வைத்தியர்கள் மூன்று நாள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin