விமான நிலையத்தில் உருவான புதிய தொழிற்சங்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட விமான நிலைய கூட்டு தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட 28 உறுப்பினர்களிள் சேவைகள் இன்று (03) நண்பகல் 12.00 மணி முதல் இடைநிறுத்தப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக வரையறுக்கப்பட்ட விமான சேவை மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாட்டில் இயங்கும் ஏனைய சர்வதேச விமான நிலையங்கள், உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் பிதுருதலாகல ரேடார் நிலைய ஊழியர்கள் இந்த தொழிற்சங்கத்தில் இணைந்துள்ளதாக விமான நிலையங்களின் கூட்டு தொழிற்சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையுடனான அனைத்து விமான சேவைகளையும் முடக்கி இடையூறு செய்யும் நோக்கில் இந்த சங்கத்தின் செயலாளர் கடிதங்களை அனுப்பியுள்தாக குற்றம் சுமத்தியுள்ள விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய, அவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சட்டரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அவர்களுக்கு உரிமையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ளும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த தொழிற்சங்கத்தில் இணைந்தவர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பிவைத்துள்ளதாகவும் அதுல கல்கெட்டிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகள் முடியும் வரை அவர்கள் விமான சேவை நிறுவனத்தின் வளாகத்துக்குள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதுல கல்கெட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்

Recommended For You

About the Author: admin