உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலான் மஸ்க் சமூக ஊடகமான X (டுவிட்டர்) தளத்தைக் கையகப்படுத்திய பின்னர் நிறுவனம் அதன் மதிப்பில் 71.5 சதவீதத்தை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளத்தின் மொத்த மதிப்பின் விகிதாசார விளைவு அதன் மதிப்பை சுமார் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் டுவிட்டரை 44 பில்லியன் டொலர்களுக்கு எலான் மஸ்க் வாங்கியிருந்தார். நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னர் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டிருந்தார்.
நிறுவனத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட சில வாரங்களில், அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உட்பட டுவிட்டரின் உயர் நிர்வ அதிகாரிகளை மஸ்க் பதவி நீக்கினார்.
டுவிட்டரை வாங்கிய பின்னர் எலான் மஸ்க் பல்வேறு சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டுள்ளார். உலகின் மிகப் பெரிய பணக்காரரான மஸ்க், “மனிதகுலத்திற்கு உதவ முயற்சிப்பதற்காக” டுவிட்டரை வாங்குவதாகக் கூறியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.