55 ஓட்டங்களுக்கு சுறுண்டது தென்னாப்பிரிக்கா: இந்தியா அபாரம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சிஸ் 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

கேப்டவுனில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

இதன்படி, அந்த அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 55 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் Kyle Verreynne அதிகப்பட்சமாக 15 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இவருக்கு அடுத்தப்படியாக டேவிட் பெடிங்காம் 12 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

ஏனைய வீரர்கள் எவரும் ஐந்து ஓட்டங்களைக் கூட தாண்டவில்லை. இந்திய அணி சார்பில் மொஹமட் சிராஜ் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். சிராஜ் டெஸ்ட் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது இது மூன்றாவது முறையாகும்.

2018 இல் காலியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பெற்றுக்கொண்ட 73 ஓட்டங்களே தென்னாப்பிரிக்காவின் மிகக் குறைந்த டெஸ்ட் ஓட்டங்களாக இருந்து வந்தது.

இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பெற்றுக்கொண்ட குறைந்த ஓட்ட எண்ணிக்கை 79 ஆகும். எனினும், இன்றையப் போட்டியில் அந்த அணி 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து டெஸ்ட போட்டிகளில் குறைந்த ஓட்டங்களை பதிவுசெய்துள்ளது.

இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin