கடல்சார் நாடுகளின் கூட்டுத் திட்டம்

இலங்கை, ஐக்கிய இராச்சியம் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் கடல்சார் நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஐக்கிய இராச்சியம் மற்றும் வடக்கு அயர்லாந்து அரசாங்கங்கள் கடல் ஆரோக்கியம் தொடர்பான உலகளாவிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. 2030ஆம் ஆண்டளவில் உலகப் பெருங்கடலில் குறைந்தது 30 வீதம் பாதுகாப்பதன் கூட்டாண்மை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்காக நாடுகளுக்குத் தேவையான நிதியை வழங்குவதிலும், கடல் பாதுகாப்பு மற்றும் நிலையான நீலப் பொருளாதாரத்தை அடைவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக 500 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ப்ளூ பிளானட் நிதியத்தை நிறுவுதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான துறை, நிதியத்தின் இலக்குகளை அடைய இருதரப்பு மற்றும் பலதரப்பு மட்டங்களில் பல திட்டங்களை வடிவமைத்துள்ளது. அந்த திட்டங்களில் ஒன்றான “கடல்சார் நாடுகளின் கூட்டாண்மைத் திட்டத்தின்” கீழ் ஆதரவைப் பெறத் தகுதியான நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்படி, கடல்சார் நாடுகளின் கூட்டுத் திட்டத்தின் ஒத்துழைப்புக்காக இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியம் மற்றும் வடக்கு அயர்லாந்து அரசாங்கங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து வெளியுறவுத்துறை மற்றும் பிற தொடர்புடைய அமைச்சுகளின் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைவாக, இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு சுற்றாடல் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin