கிழக்கின் அபிவிருத்திக்கு 48 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு

2024ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண வளர்ச்சி, மேம்பாடு மற்றும் அபிவிருத்திகளுக்காக மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 48ஆயிரத்து 223 மில்லியன் (48,223,000,000.00) ரூபா ஒதுக்கீட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணத்தில் ஆளுநர் இன்று கையொப்பமிட்டார்.

இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு முதல் கட்டமாக இன்று 101 நலத்திட்டங்களையும் ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.

முதலமைச்சரின் அமைச்சு மற்றும் உள்ளூராட்சி மன்றம், கிராமிய அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில், விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், போக்குவரத்து ஆணையம்,சுற்றுலா பணியகம், கட்டிடத் துறை வீட்டுவசதி ஆணையம்,மாகாண திட்டமிடல் செயலகம், கூட்டுறவு அபிவிருத்தி மீன்பிடி அமைச்சு,கல்வி மற்றும் கலாச்சார, முன்பள்ளி கல்வி பணியகம்,விளையாட்டு அமைச்சு, சுகாதார மற்றும் சுதேச மருத்துவத் துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் சமூக சேவைகள் அமைச்சு, வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சுகளுக்காக இந்த 101 நலத்திட்டங்கள் ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

Recommended For You

About the Author: admin