2023ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்கு நாம் வந்துவிட்டோம். இந்த ஆண்டில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த போதிலும் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு விளையாட்டுத் துறையின் மிகச் சிறந்த ஆண்டு என்றே கூறலாம்.
ரக்பி உலகக் கிண்ண போட்டி, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி, கால்பந்து போட்டிகள், ஐபிஎல் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டி, டென்னில் என பல்வேறு விளையாட்டுப் தொடர்கள் இடம்பெற்றிருந்தன.
அந்த வகையில் இந்த ஆண்டு இடம்பெற்ற முக்கிய விளையாட்டு செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.
ஜனவரி
2023 World Indoor Bowls Championship
ஜனவரி 6ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. இதில் திறந்த பிரிவில் ஜேமி வாக்கர் வெற்றிபெற்றிருந்தார். அதேநேரம், பெண்கள் சார்பில் கேத்ரின் ரெட்னால் வெற்றிபெற்றிருந்தார்.
2023 IIHF உலக மகளிர் U18 சாம்பியன்ஷிப்
ஜனவரி 8ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சுவீடனில் இந்தப் போட்டிகளில் இடம்பெற்றிருந்தன. இதில் கனடா வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 உலக ஆண்கள் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப்
ஜனவரி 11ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை இந்தப் போட்களில் இடம்பெற்றிருந்தன. போலாந்து மற்றும் சுவீடன் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்தியிருந்தது. டென்மார்க் இந்த தொடரில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 ஆடவருக்கான ஹாக்கி உலகக் கிண்ணம்
ஜனவரி 13ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை ஆடவருக்கான ஹாக்கி உலகக் கிண்ணம் போட்டிகள் இந்தியாவில் இடம்பெற்றிருந்தன. இதில் ஜேர்மனி வெற்றிவாகை சூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான T20 உலகக் கிண்ணம்
ஜனவரி 14ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்றிருந்தன. இதில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்
2023ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி 16ஆம் திகதி முதர் 29ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது. இதில் ஆடவர் பிரிவில் நோவக் ஜோகோவிச் மற்றும் பெண்கள் பிரிவில் அரினா சபலெங்கா ஆகியோர் வெற்றிபெற்றிருந்தனர்.
பெப்பிரவரி
பயத்லான் உலக சாம்பியன்ஷிப் 2023
பெப்ரவரி 8ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஜெர்மனியில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. இதில் நோர்வே அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 ஐசிசி மகளிர் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம்
2023 சர்தேச மகளிர் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்றிருந்தது. பெப்ரவரி 10ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த தொடரில் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றிருந்தது.
2023 ஐரோப்பிய ரக்பி பெண்கள் சாம்பியன்ஷிப்
2023 ஐரோப்பிய ரக்பி பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டிகள் பெப்ரவரி 11 முதல் 25ஆம் திகதி வரை நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் இடம்பெற்றிருந்தன. இதில் ஸ்பெயின் அணி வெற்றிபெற்றிருந்தது.
மார்ச்
2023 டோக்கியோ மராத்தான்
இந்த போட்டி மார்ச் ஐந்தாம் திகதி இடம்பெற்றிருந்தது. இதில் ஆடவர் சார்பில் எத்தியோபியாவின் கெல்மிசா டெசோ மற்றும் பெண்கள் சார்பில் கென்யாவின் ரோஸ்மேரி வஞ்சிரு ஆகியோர் வெற்றிபெற்றிருந்தனர்.
2023 இன்டிகார் தொடர்
அமெரிக்கா மற்றும் கனடாவில் ஐந்தாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த கார் ஓட்டப் பந்தைய தொடரில் ஸ்பெயினின் அலெக்ஸ் பாலோ வெற்றிபெற்றிருந்தார்.
2023 IBA பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
பெப்ரவரி 15 முதல் 26ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றிருந்து.
2023 மியாமி ஓபன் டென்னிஸ்
மார்ச் 22ஆம் திகதி முதல் ஏப்ரல் 2ஆம் திகதி வரை அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த டென்னிஸ் தொடரில் ஆடவர் சார்பில் டேனியல் மெட்வெடேவ் மற்றும் பெண்கள் சார்பில் செக் குடியரசின் பெட்ரா க்விடோவா ஆகியோர் வெற்றிபெற்றிருந்தனர்.
ஏப்ரல்
2023 உலக ஆடவர் கர்லிங் சாம்பியன்ஷிப்
2023 உலக ஆண்கள் கர்லிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் கனடாவில் இடம்பெற்றிருந்தது. ஏப்ரல் ஒன்று முதல் 9ஆம் திகதி வரை இடம்பெற்றிந்த இந்தப் போட்டியில் ஸ்கொட்லாந்து வெற்றிபெற்றிருந்தது.
2023 ஐஸ் ஹாக்கி மகளிர் உலக சாம்பியன்ஷிப்
இந்தப் போட்டிகள் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கனடாவில் இடம்பெற்றிருந்தது. இதில் அமெரிக்கா வெற்றிவெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 மாஸ்டர்ஸ் போட்டி
2023 மாஸ்டர்ஸ் கோல்ஃப் போட்டிகள் ஐக்கிய அமெரிக்காவில் ஆறாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரையில் இடம்பெற்றிருந்தது. இதில் ஸ்பெயினின் ஜோன் ரஹ்ம் வெற்றிபெற்றிருந்தார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் 2023
2023 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கஸகஸ்தானில் இடம்பெற்றிருந்தது. இதில் சீனாவின் Ding Liren வெற்றிபெற்றிருந்தார்.
மே
2023 உலக ஜூடோ சாம்பியன்ஷிப்
2023 உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் மே 7 முதல் 14ஆம் திகதி வரை கத்தாரில் இடம்பெற்றிருந்தது. இதில் ஜப்பான் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 இத்தாலிய ஓபன் டென்னிஸ்
2023 இத்தாலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் சார்பில் டேனியல் மெட்வெடேவ் மற்றும் பெண்களுக்கான போட்டியில் கஜகஸ்தானின் எலெனா ரைபாகினா ஆகியோர் வெற்றிபெற்றிருந்தனர்.
மே 10ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் இத்தாலியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 பீஃபா U20 உலகக் கிண்ணம்
19 வயதுக்குட்பட்ட பீஃபா U20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்றிருந்தது. மே 20ஆம் திகதி முதல் ஜூன் 11ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்தப் போட்டியில் உருகுவே அணி வெற்றிபெற்றிருந்தது.
2023 ஐபில் கிரிக்கெட் தொடர்
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மே 29ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. குஜராத் மற்றும் சென்னை அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.
நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சென்னை அணி இறுதிப் பந்தில் திரில் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக ஐபிஎல் மகுடத்தை சூடியது.
ஜூன்
2023 சொக்கா உலகக் கிண்ணம்
2023 சொக்கா உலகக் கிண்ண போட்டிகள் ஜெர்மனியில் ஜூன் 2 முதல் 11ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது. இதில் கஸகஸ்தான் அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 7 முதல் 11ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது. இதில் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதின. இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வெற்றது.
2023 பெண்கள் PGA சாம்பியன்ஷிப்
2023 பெண்கள் PGA கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவில் இடம்பெற்றிருந்தது. 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்தத் தொடரில் சீனாவின் Yin Ruoning வெற்றிபெற்றிருந்தார்.
2023 FIBA 19 வயதுக்குட்பட்ட கூடைப்பந்து உலகக் கிண்ணம்
2023 FIBA வயதுக்குட்பட்ட கூடைப்பந்து உலகக் கிண்ணப் போட்டிகள் ஹங்கேரியில் இடம்பெற்றிருந்தன. இதில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெற்றிருந்தது.
2023 உலக ரக்பி U20 சாம்பியன்ஷிப்
உலக ரக்பி U20 சாம்பியன்ஷிப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் ஜூன் 24 முதல் ஜூலை 14ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
ஜூலை
2023 விம்பிள்டன் சாம்பியன்ஷிப்
2023 விம்பிள்டன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் ஜூலை 3ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெற்றிருந்தது. இதில் ஆடவர் சார்பில் ஸ்பெயின் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் பெண்கள் சார்பில் செக் குடியரசின் Markéta Vondroušová ஆகியோர் வெற்றிபெற்றிருந்தனர்.
2023 FIBA 19 வயதுகுட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்து உலகக் கிண்ணம்
19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்து உலகக் கிண்ணப் போட்டிகள் ஸ்பெயினில் இடம்பெற்றிருந்தன. 15 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்தப் போட்டியில் அமெரிக்கா வெற்றிபெற்றிருந்தது.
2023 வலைபந்து உலகக் கிண்ணம்
2023 வலைபந்து உலகக் கிண்ணப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்றிருந்தன. ஜூலை 28 முதல் ஓகஸ்ட் 6 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்த இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றிருந்தது.
செஸ் உலகக் கிண்ணம் 2023 / பெண்கள் செஸ் உலகக் கிண்ணம் 2023
செஸ் உலகக் கிண்ணப் போட்டிகள் அஜர்பைஜானில் இடம்பெற்றிருந்தது. ஜூலை 30 முதல் ஓகஸ்ட் 24 ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்தப் போட்டியில் நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றிபெற்றிருந்தார்.
அதேபோல் பெண்கள் சார்பில் அலெக்ஸாண்ட்ரா கோரியாச்சினா வெற்றிபெற்றிருந்தார்.
ஓகஸ்ட்
2023 கனேடிய ஓபன் டென்னிஸ்
2023 கனேடிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஓகஸ்ட் 7 முதல் 13ஆம் திகதி வரை கனடாவில் இடம்பெற்றிருந்தது. இதில் ஆடவர் சார்பில் இத்தாலியின் ஜானிக் சின்னர் மற்றும் பெண்கள் சார்பில் அமெரிக்கா ஜெசிகா பெகுலா ஆகியோர் வெற்றிபெற்றிருந்தனர்.
2023 பூப்பந்து உலக சாம்பியன்ஷிப்
2023 பூப்பந்து உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் டென்மார்க்கில் ஓகஸ்ட் 21 முதல் 27ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது. இதில் ஆடவர் சார்பில் தாய்லாந்தின் குன்லவுட் விடிசார்ன் மற்றும் பெண்கள் சார்பில் தென் கொரியாவின் ஆன் சே-யங் ஆகியோர் வெற்றிபெற்றிருந்தனர்.
2023 யுஎஸ் ஓபன் டென்னிஸ்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 10ஆம் திகதி வரை அமெரிக்காவில் இடம்பெற்றிருந்தது. இதில் ஆடவர் சார்பில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்றிருந்தார்.
பெண்கள் சார்பில் அமெரிக்காவின் ஸ்டேட்ஸ் கோகோ காஃப் வெற்றிபெற்றிருந்தார்.
ஆசியக் கிண்ணம்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தியிருந்தது. ஓகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை இடம்பெற்றிருந்தது. இதில் இந்திய அணி சாம்பியனானது.
செப்டம்பர்
2023 ரக்பி உலகக் கோப்பை
ரக்பி உலகக் கிண்ணப் போட்டிகள் பிரான்சிஸ் செப்டம்பர் 8 முதல் ஒக்டோபர் 28ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன. இதில் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றிருந்தது.
2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
2022ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் இடம்பெற்றிருந்தன. செப்டம்பர் 23 முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த போட்களில் பதக்கப்பட்டியில் சீனா முதலிடம் பிடித்திருந்தது.
ஒக்டோபர்
2023 கிரிக்கெட் உலகக் கிண்ணம்
2023 சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இடம்பெற்றிருந்தது. ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்
2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் ஒக்டோபர் 22 முதல் 28ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன. இதில் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 உலக கராத்தே சாம்பியன்ஷிப்
2023 உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒக்டோர் 24 முதல் 29ஆம் திகதி வரை ஹங்கேரியில் இடம்பெற்றிருந்தது. இதில் ஜப்பான் அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நவம்பர்
2023 FIFA U-17 உலகக் கிண்ணம்
2023 17 வயதுக்குட்பட்ட கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகள் இந்தோனேசியாவில் இடம்பெற்றிருந்தது. நவம்பர் 10 முதல் டிசம்பர் 2ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஜேர்மனி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டிசம்பர்
19 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கிண்ணம்
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன. அதில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.