இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக டில்ஷான் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
சிம்பாவே அணிக்கு எதிரான போட்டியுடன் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கிரான்ட் லுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றினார்.
உலகக் கிண்ண தோல்விக்குப் பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அணியின் பயிற்சியாளர் பதவிகளில் இருந்து விலகினார், அவருக்கு பதிலாக டில்ஷான் பொன்சேகா அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
டில்ஷான் பொன்சேகா இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக இதற்கு முன்னர் பணியாற்றியவர் என்பதுடன், கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் இராகம கிரிக்கெட் கழகத்தில் ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவமிக்கவர்.
அத்துடன், இலங்கை ‘ஏ’ அணி மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கு தேசிய அணியின் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.