உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான Maersk நிறுவனத்திற்கு சொந்தமான வணிகக் கப்பல் ஒன்றின் மீது யேமனின் ஹுதி கிளர்ச்சியாளர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து செங்கடல் வழியாக தனது கப்பல்கள் செல்வதை 48 மணிநேரத்திற்கு நிறுத்தி வைக்க Maersk நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான கொள்கலன் கப்பல் மீது Bab al-Mandab Strait ஐ கடக்கும்போது ஏவுகணையால் தாக்கப்பட்டதாகவும், கிளர்சியாளர்கள் கப்பலில் ஏற முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “அடுத்த 48 மணி நேரத்திற்கு அப்பகுதி வழியாக அனைத்து போக்குவரத்தையும் நிறுத்துவதற்கு Maersk நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.