அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பேரலைகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேரலைகள் காரணமாக அம்மாநிலத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்காரணமாக கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுமக்கள் கடற்கரைகளுக்கும், கடலோரச் சாலைகளுக்கும் போக வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 30ஆம் திகதியிலிருந்து கலிஃபோர்னியாவின் தென்பகுதிகளில் உள்ள பல கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.
6.1 மீட்டர் வரை உயரமுள்ள பேரலைகள் கரை மீது மோதுவதால் கடற்கரை அருகில் உள்ள வீடுகள் சேதமடையக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ராட்சத பேரலைகளின் 8 மீட்டரிலிருந்து 9 மீட்டர் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.