அஸ்வெசும கிடைக்கவில்லையா? எவ்வாறு மீண்டும் விண்ணப்பிக்கலாம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப் பணிகள் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அஸ்வெசும திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் மாதாந்தக் கொடுப்பனவாக 2500/- ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ASWESUME BENEFICIARIES (24.12.2023)

அஸ்வெசும நலன்புரி உதவிகளைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை 20 இலட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் மீண்டும் இரண்டாம் கட்ட விண்ணப்பங்களைக் கோருவதன் மூலம், பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

DECEMBER ASWESUMA PAYMENT (21.12.2023)

அஸ்வெசும டிசம்பர் மாதத் தவணையைச் செலுத்துவதற்காக, 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிதியானது, 1,410,064 பதிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ASWESUMA APPLICATION UPDATE (11.11.2023)

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்க முன், முதற் கட்டம் தொடர்பான விரிவான மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இரண்டாம் கட்ட அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மூலம், பயனாளிகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அதற்காக, 2024 ஆம் ஆண்டிற்கு 205 பில்லியன் ரூபா நிதி அஸ்வெசும திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin