கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக வந்த நோயாளர் ஒருவருக்கு ஒக்ஸிஜனுக்கு பதிலாக கார்பனீராக்சைடு வழங்கப்பட்டு அவர் உயிரிழந்திருந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை அறிக்கையை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, வைத்தியசாலை பணிப்பாளரிடம் கோரியுள்ளார்.
நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மார்பக தொடர்பான சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருந்தார்.
அவருக்கு ஒக்ஸிஜனுக்கு பதிலாக கார்பனீராக்சைடு கொடுக்கப்பட்டதால் மூச்சு திணறல் ஏற்பட்டு இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையிலேயே இதுதொடர்பிலான உடனடி விசாரணைக்கு சுகாதார அமைச்சர் பணித்துள்ளார்.