கட்டணம் செலுத்தவில்லை : நீர் விநியோகம் துண்டிக்கப்படும் சாத்தியம்

நீர் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. குறித்த தொகையானது 15 சதவீதத்திற்கும் அதிகமாகுமென தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 12 பில்லியன் ரூபா என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நீர் கட்டணம் செலுத்துவதை நிறுத்தியுள்ளதாக ஏகநாயக்க வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பின்னணியில், 2024 ஆம் ஆண்டு முதல் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் வரை கட்டணம் செலுத்தாத காரணத்தினால் 95,000 பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு துண்டிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் குறித்து கணனி கட்டமையில் எந்தவொரு தகவலும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

நீர் விநியோகத்தை சீரமைப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணம், 2022 ஆம் ஆண்டில் துண்டிக்கப்பட்ட நீர் இணைப்புகளின் எண்ணிக்கை, 2023 ஆம் ஆண்டில் கட்டணம் செலுத்தத் தவறிய பாவனையாளர்களுக்கான சிவப்பு அறிவித்தல்கள் போன்றவையும் அவர்களிடம் இல்லை.

இதனிடையே, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது நாடளாவிய ரீதியில் 3,000,240 நீர் பாவனையாளர்களுக்கு நாளாந்தம் சுத்தமான நீரை விநியோகம் செய்வதாகத் தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: admin