டொனால்ட் டிரம்புக்கு விழுந்த அடுத்த அடி

2020ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையிலும் ஈடுபட்டனர்.

வன்முறையை தூண்டியதாக டிரம்ப் மீது பல்வேறு மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அண்மையில் கொலராடோ மாகாண கோர்ட்டு அளித்த தீர்ப்பில், அந்த மாகாணத்தில் டிரம்ப், போட்டியிட தடைவிதித்தது.

இந்த நிலையில் மற்றொரு மாகாணத்தில் டிரம்ப் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மைனே மாகாண செயலாளர் ஷென்னர் பெல்லோஸ் கூறும்போது, “குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் மைனே மாகாணத்தில் டிரம்ப் போட்டியிட தடைவிதிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதலை அமெரிக்க அரசியலமைப்பு பொறுத்துக் கொள்ளாது. பாராளுமன்ற வன்முறைகள், டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலும், ஆதரவுடன் நிகழ்ந்துள்ளன.” என அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin