அசைவம் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?

அசைவ உணவுகள் பெரும்பாலானவற்றில் கொழுப்பு இருப்பதை போல வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் புரதச்சத்துக்கள் மிகவும் அதிகமாகவுள்ளது.

உடலுக்கு தேவையான போதிய ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு அசைவ உணவுகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்ள வைத்தியர்கள் அடிக்கடி அதனால் தான் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் அது எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

சிவப்பு இறைச்சியில் புற்றுநோய் ஆபத்தா?
கடந்த 2021ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று அதிகமாக பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கும் அளவுக்கு அதிகமாக சிவப்பு இறைச்சியை எடுத்துக் கொள்பவர்களுக்கும் வயிறு மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக பர்கர், பீட்சா போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பேகன், சாசேஜ் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு ஜீரண மண்டலம், இரைப்பை சார்ந்த பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுவதாகவும் குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து அதிகமாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

தொடர்ச்சியாக சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை எடுத்துக் கொள்ளும் பொழுது இதய நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்பு 15 சதவீதம் அளவிற்கு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

அதே போல நீரிழிவு நோய் ஆபத்து 30 சதவீதம் அளவிற்கு வாய்வு தொல்லை அசிடிட்டி போன்ற அஜீரணக் கோளாறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பொதுவாக இந்த சிவப்பு அரிசி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சேச்சுரேட்டட் கொழுப்பு என்று சொல்லப்படுகின்ற உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் கொழுப்புகள் அதிகம் உள்ளதால் இவற்றை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் பொழுது இதய நோய்கள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு நோய் ஆபத்துகள் அதிகமாக இருக்கின்றது.

பிஎம்ஐ என்பது ஒருவருடைய உயரத்திற்கு ஏற்ற சரியான எடையை கணக்கிடும் அளவீடு ஆகும்.

இதை ஆங்கிலத்தில் body mass index என்று குறிப்பிடுவார்கள்.

தொடர்ச்சியாக உணவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் சிவப்பு அரிசி வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உடலின் பிஎம்ஐ அளவும் அதிகமாக இருப்பதாக தெரிய வருகிறது.

பதப்படுத்தப்பட்ட மற்றும் சிவப்பு இறைச்சி வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளும்பொழுது இதய நோய் ஆபத்துகள் அதிகமாகும்.

அதோடு மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளும் அதிகரிக்கும்.

இந்த ஆபத்துகளை தவிர்க்க நம்முடைய உணவு முறையை

பொதுவாக அசைவ உணவுகள் என்றாலே நாம் வறுத்து எண்ணெயில் பொரித்து தான் சாப்பிடுகிறோம். ஆனால் அவை உடலுக்கு மிக மோசமானவை.

உடலில் கொழுப்புகளை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செல்லும்.

ஆகையால் எவ்வளவு சரியான அளவில் அசைவ உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.

தினமும் அசைவ உணவுகளைச் சாப்பிட்டாலும் அவற்றை வேகவைத்தோ, குழம்புகளில் சேர்த்து அளவாக எடுத்துக் கொள்ளலாம்.

Recommended For You

About the Author: admin