ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,ஜனாதிபதி தேர்தலில் போட்டிட போவதாக உரிய நேரத்தில் அறிவித்த பின்னர் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய சரியான தேர்தலில் ஜனாதிபதி தேர்தலை அறிவித்த பின்னர், முழு இலங்கை மக்களும் தமது நேர்த்த அனர்த்தம் மீண்டும் தமது எதிர்கால சந்ததி அனுபவிக்க இடமளிக்காது செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் இளம் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் காணப்படும் சூழ்நிலைக்கு அமைய ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும். அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பை முன்நோக்கி கொண்டு சென்று இலங்கையை வலுவான நாடாக உலகத்திற்கு முன்னால் தூக்கி நிறுத்த வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நாட்டை நிர்வாகம் செய்ய முடியுமா?.
அவர்களால், உலக தலைவர்களுடன் பழகி இலங்கையை முன்நோக்கி கொண்டு செல்ல முடியுமா என்பதை முழு இலங்கை மக்கள் நன்றாக சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.