தாய்வானின் ஆளும் கட்சி அந்நாட்டின் சுதந்திரம் குறித்து பேசுவதை நிறுத்தாவிட்டால் அந்நாட்டுக்கு எதிராக மேலதிகமான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என சீனா நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் தாய்வானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
சீனா, தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதி செயற்பட்டு வருகிறது.
தாய்வானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரசாயனங்களுக்கான வரி குறைக்கப்பட மாட்டாது என சீனா அண்மையில் அறிவித்திருந்தது.
இதனையடுத்து சீனா தமது நாட்டுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தங்களை கொடுப்பதாகவும் தமது நாட்டின் தேர்தலில் தலையிடுவதாகவும் தாய்வான் குற்றம் சுமத்தியுள்ளது