2024 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கான அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை வெளியிடுவதற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், நாட்டின் ஆளும் கட்சியின் முக்கியக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
செவ்வாய்கிழமை நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில் ஆறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
கொள்கையுடன் கூடிய வரவு செலவுத் திட்ட நடைமுறைப்படுத்துவது, 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம், கட்சியின் தலைமையை வலுப்படுத்துதல் போன்ற விடயங்கள் அடங்கும் என கூறப்படுகிறது.
கூட்டத்தில் உரையாற்றிய கிம் ஜோங் உன், 2023 ஆம் ஆண்டு பல திருப்பங்களையும் மாற்றங்களையும் கண்டுள்ளதாகவும் அவ்வப்போது சிறிய சரிவுகள் ஏற்பட்டாலும், இராணுவம், பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வடகொரியாவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
வடகொரியா அண்மையில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் புதிய ஏவுகணையை பரிசோதித்ததை அடுத்து பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு எதிராக,அணுவாயுதப் படைகளை தயார் நிலையில் வைத்திருப்பது தமது இலக்கு என வடகொரியா கூறியுள்ளது.