நுவரெலியா கந்தபளையில் அடை மழை

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியி கந்தபளை பகுதியில் அதிக தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக உடப்புசல்லாவ – நுவரெலியா ஊடான போக்குவரத்து தடைப்பட்டதுடன் கந்தபளை கோர்ட்லோட்ஜ் சந்தியில் பிரதான வீதிக்கு மேலாக வெள்ளநீர் போவதினால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் சில வீதிகள் சேதமடைந்துள்ளது.

சில பிரதான வீதி பகுதிகளில் முற்றாக வெள்ளம் சூழ்ந்துள்ளதனால் வீதி அருகில் உள்ள வடிகான்களை அவதானிக்க முடியாத நிலையில் மக்கள் விபத்தினை எதிர்கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது

குறிப்பாக உடப்புசல்லாவ, ராகலை, கந்தபளை நகரில் இருந்து நுவரெலியாவிற்கு செல்லும் பொதுமக்கள், அரச திணைக்களங்களுக்கு அன்றாடம் தங்களின் சேவையினை பெறச் செல்லும் பொதுமக்கள் அனைவரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கந்தபளை பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு இந்த விவசாய காணிகள் மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

Recommended For You

About the Author: admin