எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தானும் பொது வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இடதுசாரி கட்சிகளுக்கு வேட்பாளர் ஒருவர் இல்லை என்பதுடன் அவர்கள் கைவிடப்பட்ட நிலைமையில் உள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சமசமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு அணி ஆகிய தரப்புக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இல்லை.
இதனால், இந்த அணிகளின் விருப்பம் மற்றும் இணக்கத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன வேட்பாளராக போட்டியிட தயார்.
1950 ஆம் ஆண்டுகளை சேர்ந்தவர்களே தற்போது நாட்டை ஆட்சி செய்கின்றனர்.
அவர்களுக்கு தற்போதைய இளைய தலைமுறையின் எண்ணங்கள் மற்றும் அபிலாஷைகள் பற்றிய எந்த புரிதலும் இல்லை எனவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.