சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் தேர்தல் குழுவை நியமித்த ஐ.தே.க.

ஜனாதிபதித் தேர்தலை வழிநடத்தும் விசேட சபையொன்றை அடுத்தவாரம் ஐக்கிய தேசியக் கட்சி நியமிக்க உள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் ஐ.தே.கவின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருகிறது.

புதிய வருடத்துடன், கட்சியை வழிநடத்தும் வகையில் இந்த தலைமைத்துவ சபை நியமிக்கப்பட உள்ளது.

புதிய தலைமைத்துவ சபைக்கு சில அதிகாரங்களை வழங்க கட்சியின் தலைவர் எதிர்பார்த்துள்ளார்.

தலைமைத்துவ சபையில் ருவான் விஜேவர்தன, ஹரின் பெர்னாண்டோ, வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க, சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இடம்பெற உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,

”புதிய வருடத்தில் தலைமைத்துவ சபையொன்று நியமிக்கப்படும். பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க, சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம், பாலித ரங்கே பண்டார மற்றும் நானும் இந்த சபையில் இருப்போம்.

ஏனையவர்கள் தொடர்பில் உறுதியாக தெரியவில்லை.” என அவர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin