இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கான ஒன்லைன் பயணிகள் இருக்கை முன்பதிவு சேவையில் 200 பேருந்துகள் இணைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், sltb.eseat.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பயணிகளின் ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 80,000 பயணிகள் இருக்கைகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் கிட்டத்தட்ட மூன்றரை கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் ஒன்லைன் முறை மூலம் ஆசனபடபதிவு செய்யமுடியாதவர்கள் மேற்படி 1315 என்ற எண்ணின் மூலம் தொடர்புகொண்டு இடங்களை இலகுவான முறையில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.