உலகத் தலைவர்களை பின் தள்ளி சாதனை படைத்த மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சனல் இன்று 2 கோடி சந்தாதாரர்களை கடந்தது. இதன்மூலம், உலகத் தலைவர்களின் சனல்களில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சனல் என்ற சாதனை படைத்துள்ளது.

இந்த சனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் 4.5 பில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ளன.

பின்தள்ளப்பட்ட உலகத்தலைவர்கள்
பிரதமர் மோடியின் யூடியூப் சனலுக்கு அடுத்தபடியாக, பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் யூடியூப் சனல் இரண்டாவது இடத்தில் உள்ளது. அவரது யூடியூப் சனல் மொத்தம் 64 லட்சம் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது.


அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சனல் 7.89 லட்சம் சந்தாதாரர்களையும், துருக்கி அதிபர் எர்டோகனின் சனல் 3.16 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன.

பிரதமர் மோடியின் யூடியூப் சனல்
பிரதமர் மோடியுடன் தொடர்புடைய ‘யோகா வித் மோடி’ என்ற யூடியூப் சனல், 73,000 சந்தாரர்களை பெற்றுள்ளது.

இந்திய தலைவர்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் சனலுக்கு 35 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். பிரதமர் மோடியின் யூடியூப் சனல் 2007 ஒக்டோபரில் அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor