சுனாமி முன்னெச்சரிக்கை கருவிகள் செயலிழப்பு:

சுனாமி அனர்த்தத்தின் பின்னர் நாட்டின் நிர்மாணிக்கப்பட்ட சுனாமி முன்னெச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்களில் பெரும்பாலானவை செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நாட்டின் 14 கரையோர மாவட்டங்களில் 77 சுனாமி முன்னெச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனம் ஒன்று குறித்த சுனாமி முன்னெச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு தேவையான தொழில்நுற்ப வசதிகளை வழங்கியிருந்தது.

இருப்பினும், குறித்த நிறுவனம் வழங்கிய செயற்கைக்கோள் கருவிகளின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இவற்றைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் பெருமளவான பணத்தை செலவிட வேண்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 05 இடங்களில் 32 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சுனாமி முன்னெச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் செயலிழந்த நிலையில் இருப்பதாக 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பல சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் தற்போது செயலிழந்துள்ளதாக காலி மாவட்ட கரையோர பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin