கதிர்காமத்தில் பக்தர்கள் வைக்கும் காணிக்கை குறைந்துள்ளது

கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அர்ச்சனை தட்டுகளில் வைக்கும் காணிக்கை பணம் 50 வீதமாக குறைந்துள்ளதாக தெரியவருகிறது.

ஆலயத்தின் பிரதான பூசகர் உட்பட பூசகர்கள் ஆலயத்திற்கு கிடைக்கும் காணிக்கை பணம் மற்றும் தங்கம் என்பவற்றை தமது வீடுகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரியவந்துள்ளதை அடுத்து பக்தர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கதிர்காமம் ஆலயத்தின் அர்ச்சனை தட்டுகளில் காணிக்கை பணத்தை வைப்பதற்கு பதிலாக ஆலயத்தின் வளாகத்தில் இருந்தும் மகரகமை புற்றுநோய் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கான நிதியத்திற்கு பணம் வழங்குவது அதிகரித்துள்ளது.

கதிர்காமம் ஆலயத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் பிரதான பூசகர் மற்றும் இரண்டாவது பூசகரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் காரணமாகவே அர்ச்சனை தட்டுகளில் வைக்கப்படும் காணிக்கை பணம் குறைந்துள்ளது.

மேலும் கதிர்காமம் ஆலயத்திற்கு சென்று பூசகர்களை சந்தித்து பூஜை நடத்துவதற்கு பதிலாக பக்தர்கள் கிரிவேஹேர விகாரைக்கு பின்னால் உள்ள ஆலயம் மற்றும் அபினவாராமய ஆலயங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin