வீட்டில் இருக்கும் பீங்கான்,கோப்பை, சட்டி, பாணைகள் அடகு வைக்கும் நிலைமைக்கு சென்ற பின்னரே அரசாங்கத்தின் பயணம் முடிவுக்கு வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அப்பாவிகளான சிறிய மனிதர்களின் அனைத்தையும் பிடிங்கி சாப்பிடும் ஆட்சியாளர்கள், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எந்த அர்ப்பணிகளையும் செய்யவில்லை.
அடகு கடைகளுக்கு முன்னால் வரிசையில் நிற்கும் மக்களின் கைகளை பாருங்கள் என்று ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுகின்றேன்.
குழந்தைகளின் காதணிகள்,மாலைகள், பஞ்சாயுதம் போன்றவை கூட அவர்களின் கைகளில் இருக்கின்றன.
வரிசுமை அதிகரிப்பு, பொருட்களின் விலையேற்றம், வருமான இழப்பு, மின்கட்ட உயர்வு உட்பட பல காரணங்களால் மக்கள் பொருளாதார ரீதியில் கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.