பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையில் நேற்றைய தினம் வரை 2 ஆயிரத்து 938.73 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் போது கைப்பற்றிய வாகங்களின் பெறுமதி ஆயிரத்துமு 427 லட்சம் ரூபா எனவும் காணிகள், வீடுகள், ஸ்பா மற்றும் வில்லா ஆகியவற்றின் பெறுமதி ஆயிரத்து 370 லட்சம் ரூபா எனவும் அமைச்சு கூறியுள்ளது.
அத்துடன் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரொக்கத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் சொத்துக்களை கைப்பற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. வேன்,கார்கள்,டிப்பர் வாகனம்,பேருந்து, மோட்டார் சைக்கிள்கள் என 20க்கும் மேற்பட்ட வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அடையாளம் காணப்பட்டுள்ள 109 பிரதான போதைப் பொருள் கடத்தல்காரர்களின் 100 கோடி ரூபாவுக்கும் மேலான சொத்துக்கள் முடக்கப்பட உள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது