‘Port City’ க்கு தென்னிந்தியாவில் இருந்து முதலீடுகளை ஈர்க்க முயற்சி

தென்னிந்தியாவில் இருந்து கொழும்பு துறைமுக நகருக்கு (Port City) புதிய முதலீடுகளை ஈர்ப்பது குறித்து போர்ட் சிட்டி நிர்வாகம் கவனம் செலுத்தியுள்ளது.

CHEC Port City Colombo [Pvt.] Ltd இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் துல்சி அலுவிஹார தென்னிந்தியாவில் பல முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

இதன் ஒருகட்டமாக தமிழகத்தின் உள்ள இலங்கை தூதரகத்தின் உதவி உயர்ஸ்தானிகர் D.வெங்கடேஸ்வரன் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பின் போது, போர்ட் சிட்டிக்கு தென்னிந்திய முதலீடுகளை பெறுவதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்தனர்.

இந்தியாவின் தென் பகுதியிலிருந்து கொழும்பு துறைமுக நகரத்திற்கு உயர்நிலை முதலீடுகளை கொண்டுவருவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு போர்ட் சிட்டி நிர்வாகத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர், உதவி உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

போர்ட் சிட்டியில் முதலீடு செய்வதால் சில பாதிப்புகள் ஏற்படும் என்ற தவறான கருத்துகள் நிலவுவது குறித்து உதவி உயர்ஸ்தானிகர் D.வெங்கடேஸ்வரனுக்கு, துல்சி அலுவிஹார தெளிவுப்படுத்தினார்.

தென்னிந்திய மாநிலங்களில் முதலீட்டாளர்களைச் சந்திக்க ஏற்பாடுகளை செய்வதாக உதவி உயர் ஸ்தானிகர், துல்சி அலுவிஹாரவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin